Saturday, June 26, 2010

என்னை கவிஞன் ஆக்கிய கவிதைகளில் இரண்டு மட்டும் இங்கே

பூச்சியின் இறுதி சடங்கில் எறும்புகளின் ஊர்வலம் 


அமைதிக்காக வைக்கப்பட்ட விருந்தில் புறாவின் கறி பரிமாரப்பட்டது

Friday, June 25, 2010

மறுபிறவி

அணிலாக பிறக்க ஆசை 
குறவர்கள் இல்லாத வூரில் 
 மயிலாக பிறக்க ஆசை 
வேடர்கள் இல்லாத காட்டில் 
 மனிதனாக பிறக்க ஆசை 
மதங்கள் இல்லாத நாட்டில் 
 ஆனால், மறுபடியும் பிறக்க ஆசை 
மகாத்மா பிறந்த இந்த மண்ணில்

உலகம் அழியுது

கால்கள் ஆசறுது நாள்கள் கழியுது 
வேலையும் எங்கு தான் இன்று கிடைக்குது 
லஞ்சம் பெருகுது நெஞ்சம் வருந்துது 
பஞ்சம் பட்டினியில் உடல்கள் மடியுது 
 நாளும் வளருது கொள்ளை அடிப்பது 
நாட்டில் யார் இங்கு திருந்தி இருப்பது 
உள்ளம் வருந்துது வூறென்ன ஆவது 
உண்மை சொல்லின் உலகம் அழியுது

நானும் ஒரு சாஜஹான்

மஞ்சள் நிறம் அவள் மேனி 
மாம்பழமே அவள் கன்னம் 
கொஞ்சும் அழகிய கண்கள் 
கவிதை சொல்லும் புருவம் 
கருநிற அழகிய கூந்தல் 
கவ்ர்ந்திழுக்கும் உருவம் 
சொப்பனத்தில் இருக்கும் எனக்கு
 இந்த சொர்கத்து கண்ணி கிடைத்தால் 
தயங்காமல் செய்வேன் சத்தியம் 
சாஜஹானின் சரித்திரத்தை சாய்பேனென்று

என்னவள்

ப்ரஹ்ம்மாவின் ஒப்பனையில் பென்னாக பிறந்த அந்த பொன்மானுக்கு 
உலக பேரழகி தலையிருந்து பெயற்தெடுது வெய்கவென்டும் க்ரீடத்தை